| ADDED : ஆக 16, 2024 04:15 AM
காரைக்குடி: * அழகப்பா பல்கலையில் துணைவேந்தர் ரவி கொடியேற்றினார். ராணுவ வீரர் நாகலிங்கத்தின் பெற்றோர்கஸை கவுரவித்தனர். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சேகர், ராஜாராம், ஜெயகாந்தன், பதிவாளர் செந்தில் ராஜன், தேர்வாணையர் ஜோதிபாசு, நிதி அலுவலர் வேதிராஜன் பங்கேற்றனர். * காரைக்குடி எம்.பி., அலுவலகத்தில் கார்த்தி எம்.பி., கொடியேற்றினார்.* காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் மாங்குடி எம்.எல்.ஏ., கொடியேற்றினார்.* காரைக்குடி மாநகராட்சியில் மேயர் முத்துத்துரை கொடியேற்றினார். கமிஷனர் சித்ரா, முன்னாள் அமைச்சர் தென்னவன், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். * சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அவலகத்தில் தலைவர் சரண்யா கொடியேற்றினார். * கோட்டையூர் பேரூராட்சியில் தலைவர் கார்த்திக் சோலை கொடியேற்றினார். செயல் அலுவலர் தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். * பள்ளத்தூர் பேரூராட்சியில் தலைவர் சாந்தி கொடியேற்றினார். ந* காரைக்குடி கிட் அண்ட் கிம் கல்லூரியில் அறங்காவலர் பிரியதர்ஷினி கொடியேற்றினார். முதல்வர் கற்பகமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். * காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளிகளில் தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். முதன்மை முதல்வர் அஜய் யுக்தேஷ் முன்னிலை வகித்தார். சகாய மாதா ஆலய பங்குத்தந்தை சார்லஸ் இருதயம் கொடியேற்றினார். உதவி பங்குத்தந்தை டேனியல் திலீபன், பள்ளி செயலர் ரஜனி ரத்தினமாலா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா, ஓய்வு ஆசிரியர் சுந்தர்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஹேமமாலினி தலைமை வகித்தார். டாக்டர் அப்துல் இர்பானா கொடியேற்றினார். * புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி, கல்லுாரியில் டாக்டர் அமலா கொடியேற்றினார். தாளாளர் சுவாமிநாதன், பள்ளிக்குழு தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகமது மீரா பங்கேற்றனர். * காரைக்குடி நேஷனல் பயர் அண்டு சேப்டி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தாளாளர் சையது கொடியேற்றினார். நேஷனல் சாப்ட் டெக் கம்ப்யூட்டர் பயிற்சி மண்டல அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் தினேஷ் கொடியேற்றினார். நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் இயக்குனர் மனோகர் கொடியேற்றினார்.* காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் தாளாளர் சத்யன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் சங்கீதா முன்னிலை வகித்தார். கல்வி சார் இயக்குனர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தார். துணை முதல்வர் சுபாஷினி வரவேற்றார். பள்ளி முதல்வர் சங்கர சுப்பிரமணியன் கொடியேற்றினார். * அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் கல்லுாரி செயலர் யதீஸ்வரி சாரதீஸ்வரி பிரியா, ராமகிருஷ்ண பிரியா தலைமை வகித்தனர். தேவகோட்டை டாக்டர் ஜெயராணி கொடியேற்றினார். கல்லூரி முதல்வர் சிவசங்கரி வரவேற்றார். * காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் ராணுவ ஆணைய அதிகாரி மிஸ்ரா கலந்து கொண்டார். டாக்டர். ஜெயராணி கொடியேற்றினார். ஆசிரியர் சூர்யா வரவேற்றார். முதன்மை முதல்வர் நாராயணன் பள்ளிச் செயலர் கார்த்தி ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை ஏற்றனர். பள்ளி முதல்வர் ராஜ்குமார் பங்கேற்றனர். * காரைக்குடி எஸ்.ஆர் கேட்டரிங் நர்சிங் தொழில் பயிற்சி கல்லூரி மற்றும் ராஜாஸ் ஹெரால்டு பள்ளியில் தலைமை ஆசிரியர் மாலதி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் அப்துல் சித்திக் கொடியேற்றினார்.* காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி போஜனம் கோயில் அறங்காவலர்களால் நடத்தப்பட்டது. இதில் இந்து மதாபிமான சங்கத் தலைவர் ஆர். ராமநாதன் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர். * சேது பாஸ்கரா வேளாண் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சேது குமணன் தலைமை வகித்தார். அமராவதிபுதூர் சி.ஐ.எஸ்.எப் மூத்த கமாண்டன்ட் சங்கர் குமார் ஜா பங்கேற்றார். கல்லூரி முதல்வர் கருணாநிதி பங்கேற்றனர். * கல்லல் முருகப்பா மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அழகப்பன் கொடியேற்றினர். * கலைவாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் கண்ணன் தலைமை ஏற்றார். பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் சிவசங்கரனின் தாயார் மகேஸ்வரி கொடியேற்றினார். //