உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு கல்வெட்டு பயிற்சி

மாணவர்களுக்கு கல்வெட்டு பயிற்சி

சிவகங்கை ; சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் கல்லுாரி வரலாற்று துறை மாணவர்களுக்கான கல்வி இடை பயிற்சி வழங்கும் முகாம் நடைபெற்றது. இங்கு, ஜூன் 13 முதல் 18 வரை சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி, காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி முதுகலை வரலாற்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், கல்வெட்டு அமைப்பு வாசித்தல் போன்று கல்வெட்டு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.தொல்நடைக்குழு நிறுவனர் காளிராஜா பயிற்சி அளித்தார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார்.கல்வெட்டு தொடங்கும் முறை, அமைப்பு முறை, கல்வெட்டு செய்திகள், ஓம்படைக்கிளவி ோன்றவை குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி