| ADDED : ஏப் 22, 2024 06:21 AM
சிவகங்கை : காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இத்தொகுதிக்கு உட்பட்ட 1,873 ஓட்டுச்சாவடிகளில் நடந்த ஓட்டுப் பதிவிற்கு பின், பதிவான 3,746 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தலா 1,873 கட்டுப்பாட்டு, உறுதி தன்மை இயந்திரங்கள் அனைத்தும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுபதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் முன் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 92 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாகலாந்து துணை ராணுவம், திருச்சி பட்டாலியன், ரயில்வே பாதுகாப்பு படையினர் என 357 பேர் உள்ளனர். இவர்கள் உட்பட உள்ளூர் போலீசார் 300க்கும் மேற்பட்டவர்கள் சுழற்சி முறையில் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.