உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயமங்கலம் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

தாயமங்கலம் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான யாக சாலை பூஜையில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த சில வருடங்களாக பராமரிப்பு நடைபெற்றது. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் கடந்த 19ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் ஆரம்பமாகின. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை,பூஜை நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான நுாற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்து வருகின்றனர்.நாளை (22ம் தேதி) காலை 8:00 - 9:15 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்,விழா கமிட்டியினர், கோயில் பணியாளர்கள்,கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை