உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / லெனின் கம்யூ., மாநில செயற்குழு கூட்டம்

லெனின் கம்யூ., மாநில செயற்குழு கூட்டம்

திருப்புத்துார் : லெனின் கம்யூ., மாநில செயற்குழு கூட்டம் திருப்புத்துாரில் பொதுச் செயலாளர் கே.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மின்சார உற்பத்தியை அரசே நடத்த வேண்டும்,கள்ளச்சாராயத்தை ஒழித்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், ஆற்று நீர் கடலில் கலந்து வீணாகாமல் கூடுதல் தடுப்பணைகளை கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திருச்சி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு ஞானமுத்து, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தங்கவேல், தஞ்சை மாவட்ட செயலாளர் லீலாவதி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் பெரியசாமி, அருள்சாமி, பத்மநாதன் மாநில துணைச் செயலாளர் லட்சுமணன்,ராஜசேகரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை