மேலும் செய்திகள்
சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்
20-Feb-2025
திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே 13 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சத்துணவு அமைப்பாளர் சரவணனை 59, போக்சோவில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் இடும்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சரவணன் பள்ளி சத்துணவு அமைப்பாளராக உள்ளார். பள்ளியில் படிக்கும் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அப்பள்ளியில் நடந்துள்ளது. நிகழ்ச்சிக்கு வந்த அதிகாரியிடம் இது குறித்து மாணவி தெரிவித்தார்.மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜோதி விசாரணை நடத்தினார். அதில் சிறுமியிடம் சரவணன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.மகளிர் போலீசார் விசாரித்து சரவணனை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர்.
20-Feb-2025