உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழையால் மண் அரிப்பு ரோடுகளில் பராமரிப்பு

மழையால் மண் அரிப்பு ரோடுகளில் பராமரிப்பு

திருப்புத்துார் : திருப்புத்துார் கிராம ரோட்டோரங்களில் மண் அரிப்பை அகற்றி மண் அணைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கியுள்ளனர்.அண்மையில் பெய்த தொடர் மழையால் பல ரோடுகளில் மண் அரிப்பு ஏற்பட்டு, ரோட்டோரங்களில் பள்ளங்கள் காணப்படுகின்றன. மேலும் செடி,புதர்கள் அதிகரித்து விட்டன.இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக நெடுஞ்சாலைத்துறையினருக்கு புகார்கள் வந்தன.இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் முதற்கட்டமாக கண்டரமாணிக்கம், பட்டமங்கலம், தேவரம்பூர், சுண்ணாம்பிருப்பு, நாட்டார்மங்கலம் கிராமங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் மண் அள்ளும் எந்திரம் மூலம் பராமரிப்புப் பணிகளை துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை