சிவகங்கை, : சிவகங்கை தொகுதி தேர்தல் முடிவில் அ.தி.மு.க., நம்பும் மானாமதுரை அவர்களை கைவிட்டு, பா.ஜ.,விற்கு கை கொடுக்க தொடங்கியுள்ளது இத்தேர்தல் முடிவு மூலம் தெரியவந்துள்ளது.இத்தொகுதியில் காங்., சார்பில் கார்த்தி எம்.பி., வெற்றி பெற்றாலும், 2வது இடத்தை பிடிப்பதில்அ.தி.மு.க., - பா.ஜ., இடையே தான் போட்டி நிலவி வந்தது. அ.தி.மு.க.,விற்கு அதிக ஓட்டுக்கள் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையான மானாமதுரை சட்டசபை தொகுதி, இத்தேர்தலில் அ.தி.மு.க.,வை கைவிட்டு விட்டு, பா.ஜ.,விற்கு கை கொடுக்க தொடங்கிவிட்டது.மானாமதுரை தொகுதியில் அ.தி.மு.க., 33,224 வும், பா.ஜ., 40,552 ஓட்டுக்களை பெற்றுஉள்ளது. காரைக்குடியிலும் பா.ஜ.,விற்கு 42,203 ஓட்டுக்களை பெற்று தந்துள்ளது.சிவகங்கையில் அ.தி.மு.க., 37,242ம், பா.ஜ., 39,860 ஓட்டுக்களும் பெற்றுள்ளன. அதிகபட்சமாக அ.தி.மு.க.,விற்கு திருப்புத்துார் தொகுதி தான் 41,028 ஓட்டுக்களை பெற்று தந்துள்ளது. அடுத்ததாக திருமயம் 40,167 ஓட்டுக்களை பெற்று தந்துள்ளது. பா.ஜ.,விற்கு இவ்விரு தொகுதியும் (ஆலங்குடி- 19,235, திருமயம்- 19,624) பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. எனவே வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு மானம் காத்த தொகுதியான மானாமதுரையை தக்கவைத்து கொள்ள அக்கட்சி தலைமை முயற்சிக்க வேண்டும். அதே போன்று பா.ஜ.,விற்கு காரைக்குடி, சிவகங்கை கை கொடுத்தாலும், மற்ற இரண்டு தொகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி, கட்சி பணி ஆற்றினால் தான், சட்டசபை தேர்தலில் ஓட்டு சதவீதத்தை அ.தி.மு.க.,- பா.ஜ., ஆகிய இரு கட்சியும் அதிகரிக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.