உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோமாரி தடுப்பூசி முகாம்

கோமாரி தடுப்பூசி முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள மாட்டினங்களுக்கும் ஜூன் 10 முதல் 21 நாட்கள் கால் மற்றும்வாய் காணை என்ற கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக வரும் ஜூன் 10 முதல் தொடர்ந்து 21 நாட்கள் வரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் துறை ரீதியாக வருகை புரிந்து தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இத்தடுப்பூசிப் பணிக்காக 70 கால்நடை மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த குழு அனைத்து கிராமங்களுக்கும் சென்று கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும்.இதனை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசி செலுத்தி தங்கள் கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து பாதுகாத்திட வேண்டும். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி தகவல்களை பெற்று பயன் பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ