உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இயற்கை பாதுகாப்பு கருத்தரங்கம்

இயற்கை பாதுகாப்பு கருத்தரங்கம்

காரைக்குடி: காரைக்குடி ஆலங்குடியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இயற்கை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜன் தலைமையற்றார். காரைக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மேலாளர் டாக்டர் அருள்தாஸ் முன்னிலை வகித்தார். ஆசிரியை கண்ணாம்பாள் வரவேற்றார். நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர்பிரகாஷ் பேசினார். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சட்டபிரிவு செயலர் முகமது ஆசிக் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !