உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதிய மின்கட்டணம் பிரித்து வசூலிக்க திட்டம்; மின்வாரிய அதிகாரிகள் தகவல்

புதிய மின்கட்டணம் பிரித்து வசூலிக்க திட்டம்; மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சிவகங்கை : மின் கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதால், ஜூன் மற்றும் ஜூலைக்கான மின் கட்டணத்தை இரண்டாக பிரித்து வசூலிக்க வாரியம் திட்டமிட்டுள்ளது.ஜூலை 1 முதல் உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் அமலுக்கு வரும் என வாரியம் அறிவித்துள்ளது. தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஜூன் மற்றும் ஜூலை மாத மின் பயன்பாட்டை எப்படி பிரித்து கணக்கிட்டு, கட்டணம் வசூலிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிகாரிகள் கூறியதாவது: ஜூன், ஜூலையில் பயன்படுத்திய மின் யூனிட்டை கணக்கிடுவோம். அதில் 100 யூனிட் இலவச மின்சாரம் கழிக்கப்படும். அதற்கு மேல் உள்ள மொத்த யூனிட்டை இரண்டாக பிரித்து ஒரு பாதிக்கு பழைய கட்டணமும் மீதிக்கு புதிய கட்டணமும் வசூலிக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்