உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் புதிய நிழற்குடை

திருப்புத்துாரில் புதிய நிழற்குடை

திருப்புத்தூர் : திருப்புத்துாரில் உள்ள நீதிமன்ற பஸ் ஸ்டாப்பில் கூடுதல் வசதியுடன் கூடிய நிழற்குடைகட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்துார் -- சிவகங்கை ரோட்டில் நீதிமன்றம், மின் அலுவலகம் அருகே பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு அனைத்து பஸ்களும் நின்று செல்லும்.தற்போது மதுரை ரோட்டின் புறவழிச்சாலையில் வரும் பஸ்களும் நின்று செல்கின்றன. இங்கு நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.இதனால், அதிகளவில் பயணிகள் இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து தான் சிவகங்கை, திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்கின்றனர். தற்போதுள்ள குறுகிய பஸ் ஸ்டாப் பயணிகளுக்கு போதுமான அளவில்இல்லை. எனவே இங்கு மின், குடிநீர் வசதியுடன் கூடிய நவீன நிழற்குடை அமைத்துதர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை