உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஏ.டி.எம்., மையங்களில் பணமில்லை

ஏ.டி.எம்., மையங்களில் பணமில்லை

திருப்புவனம் : திருப்புவனத்தில் ஏ.டி.எம்., மையங்களில் கடந்த இரு நாட்களாக பணம் இல்லாததால் பொதுமக்கள் ஒவ்வொரு மையங்களிலும் ஏறி இறங்கி அலைச்சலுக்குஉள்ளாகி வருகின்றனர். திருப்புவனத்தில் தேசிய வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் 7 உள்ளன. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் இந்த ஏ.டி.எம்., மையங்களையே நம்பியுள்ளனர். தினமும் இந்த ஏ.டி.எம். இயந்திரத்தை நம்பியே இப்பகுதி மக்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாளாக ஏ.டி.எம்.,களில் போதிய அளவு பணம் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: தனியார் நிறுவனம் மூலம் ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்ப படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் மையங்களில் வைக்கப்படும். திருப்புவனத்தில் தொடர்ந்து திருமண விழாக்கள் நடந்ததாலும் விடுமுறைக்காக வந்த வெளியூர்வாசிகள் பலரும்பணம் எடுத்ததால் பணம் இல்லை. பணத்தை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி