உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.வரும் ஏப்.19ல் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு முதல் ஒட்டு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி, ஒட்டுச்சாவடி இடமாற்றம், அடிப்படை வசதிகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தேர்தல் ஆணையம் செய்தது. இந்நிலையில் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 16ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களாக பணியாற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர், தேர்தல் தொடர்பாக பல்வேறு பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்கான முதல் பயிற்சி வகுப்பு மார்ச் 24 அன்று நடைபெற்றது. இப்பயிற்சி மூன்று கட்டங்களாக நடக்க உள்ள நிலையில் இரண்டாம் கட்ட பயிற்சி ஏப்.5 அல்லது ஏப்.7ல் நடக்க உள்ளது. பல்வேறு நிலை அலுவலர்களாக கல்வித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 7ஆயிரம் ஊழியர்கள் பணி செய்ய உள்ளனர். இதில் கல்வித்துறையில் மட்டும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 5ஆயிரத்து 951ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதற்கட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில் இதில் 140 பேர் கலந்து கொள்ளவில்லை. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.ஆசிரியர்கள் கூறுகையில், உடல் நலமில்லாதவர்கள், உடல் உபாதைகள் உள்ளவர்கள் என தெரிவித்து மருத்துவ சான்றிதழ் வழங்கினாலும் பணி ரத்து செய்யப்படவில்லை. தேர்தல் பணிகளில் கல்வித்துறை சார்ந்தவர்களே 90 சதவீதத்தினர் ஈடுபடுகின்றோம். தேர்தல் பணியில் ஈடுபட அறிவிப்பு அனுப்பப்பட்ட மொத்த எண்ணிக்கையில் மிகக்குறைவானவர்களே தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வரவில்லை. அவர்களும் உடல் நலக்குறைவு உள்ளிட்ட தகுதியான காரணங்களால் தான் வர இயலவில்லை. எனவே விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும் நடவடிக்கை தேவையற்றது. இது போன்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி