உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாடு முட்டி முதியவர் பலி

மாடு முட்டி முதியவர் பலி

நெற்குப்பை: திருப்புத்துார் அருகே பரியாமருதிப்பட்டி சேவுகப்பெருமாள் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில்மாடு முட்டியதில் முதியவர் இறந்தார்.பரியமருதிப்பட்டி சேவுகப்பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழாவின் நிறைவாக நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. தொழுவிற்கு தீபாராதனை காட்டி காலை 10:50 மணிக்கு காளைகளை அவிழ்த்தனர். 400க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. தொழுவிற்கு வெளியே நுாற்றுக்கணக்கில் கட்டுமாடுகளும் அவிழ்க்கப்பட்டன. வேடிக்கை பார்க்க வந்த செண்பகம்பேட்டை கருப்பையா மகன் பெரியய்யா 70 காளை முட்டியதில் இறந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு ஏற்பாட்டாளர்கள் 6 பேர் மீது நெற்குப்பை போலீசார்வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ