உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாடு குறுக் கே வந்ததா ல் ஒருவர் பலி

மாடு குறுக் கே வந்ததா ல் ஒருவர் பலி

பூவந்தி: பூவந்தி அருகே சாலை விபத்தில் ஹெல்மெட் அணிந்திருந்தும் நகை கடை உரிமையாளர் உயிரிழந்தார். மதுரை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 55, திருப்புவனத்தில் நகை கடை வைத்துள்ளார். திருப்புவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலரும் தங்க நகை வாங்கி விட்டு வாரந்தோறும்பணம் வழங்குவது வழக்கம்.பணம் வசூல் செய்வதற்காக நேற்று முன் தினம் டூவீலரில் திருமாஞ்சோலை சென்றுஉள்ளார். குயவன்குளம் விலக்கில் சாலையின் குறுக்கே மாடு சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் கீழே விழுந்த போது ஹெல்மெட் கழன்று ஓடியதால் தலையில் அடிபட்டு உயிர்இழந்துள்ளார். விபத்து குறித்து பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை