உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அருளானந்தபுரத்தில் சர்ச் திறப்பு

அருளானந்தபுரத்தில் சர்ச் திறப்பு

மானாமதுரை: இடைக்காட்டூர் அருகே உள்ள அருளானந்தபுரத்தில்புனித அன்னாள் ஆலய திறப்பு விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.இடைக்காட்டூர் அருகே அருளானந்தபுரத்தில் இருந்த மிகப் பழமை வாய்ந்த ஆலய கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து பங்கு இறைமக்கள், உள்ளூர், வெளிநாடு வாழ் இறை மக்கள்,புனித அன்னாளின் மைந்தர்கள் சங்கம்,புனித அன்னாளின் பக்தர்கள் ஆகியோர் சார்பில் ரூ.37 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து புதிய சர்ச் கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த சிவகங்கை மறை மாவட்ட ஆயர் ஆனந்தத்திற்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர்அவர் புதிய சர்ச் கட்டடத்தை திறந்து வைத்து புனித நீர் தெளித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவில் அருளானந்தபுரம்,இடைக்காட்டூர் பகுதிகளைச் சேர்ந்த பங்கு இறைமக்கள் மற்றும் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல் தாசன், இடைக்காட்டூர், அருளானந்தபுரம் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்