உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெல் கமிஷன் ஏஜன்ட் கடத்தல்

நெல் கமிஷன் ஏஜன்ட் கடத்தல்

சிவகங்கை: காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் குமார் 41. நெல் வாங்கி விற்கும் ஏஜன்டாக உள்ளார்.இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் 25 அவரது கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் ரூ.29 லட்சத்துக்கு நெல் மூடைகளை சேகரித்து குமாரிடம் விற்றுள்ளார். குமார் ஹரிஹரனிடம் ரூ.9 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளார். மீதமுள்ள 20 லட்சத்தை ஒரு மாதத்திற்கும் மேலாக தராமல் காலம் தாழ்த்தியுள்ளார். ஆத்திரம் அடைந்த ஹரிஹரன் செவ்வாய் கிழமை அவரது நண்பர்களுடன் சாக்கோட்டை அருகே உள்ள ஒரு பேக்கரி அருகே நின்று கொண்டிருந்த குமாரை இரண்டு காரில் வந்து தாக்கி கடத்திச் சென்றனர்.அருகில் இருந்தவர்கள் சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தனிப்படை போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புதுப்பட்டி பகுதியில் ஹரிஹரன் 25, ராமநாதபுரம் மாவட்டம் நத்தகோட்டை ராஜேஷ் 47, அரசூர் காளிதாஸ் 34, நத்தகோட்டை கார்த்திக் 34, தேவகோட்டை அருகே கர்களத்துார் சிவா 28, புதுக்குடி தமிழ்மணி 31 ஆகிய 6 பேரை கைது செய்து குமாரை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ