உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெல் கொள்முதல் நிலையம் துவக்கம் கலெக்டர் தகவல் 

நெல் கொள்முதல் நிலையம் துவக்கம் கலெக்டர் தகவல் 

சிவகங்கை; கோடையில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய கீழநெட்டூர், குவளைவேலி, பீசர்பட்டினத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:மாவட்டத்தில் கோடை பருவத்தில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய, விவசாயிகளின் கோரிக்கை படி 2022-2023ம் ஆண்டு காரைக்குடி அருகே எஸ்.ஆர்., பட்டினத்தில் 2 நெல் கொள்முதல் நிலையம், திருப்புவனம் அருகே திருமாஞ்சோலையில் 2 கொள்முதல் நிலையம் திறந்து 448 டன் நெல் கொள்முதல் செய்தனர்.அதே போன்று திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை, ஏனாதி, காரைக்குடி அருகே எஸ்.ஆர்., பட்டினத்தில் அமைத்த கொள்முதல் நிலையம் மூலம் இரண்டாம் கட்டமாக 251 டன் நெல் கொள்முதல் செய்தனர். தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கோடையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய இளையான்குடி அருகே கீழநெட்டூர், மானாமதுரை அருகே பீசர்பட்டினம், குவளைவேலி ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ