உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளத்துார் -- கல்லுார் ரோட்டில் குப்பை கழிவுகளால் துர்நாற்றம்

பள்ளத்துார் -- கல்லுார் ரோட்டில் குப்பை கழிவுகளால் துர்நாற்றம்

காரைக்குடி : பள்ளத்துார் பேரூராட்சியில் குப்பைகள் கொட்ட இடமின்றி, கல்லுார் - ரோட்டில் குப்பை கழிவுகளை கொட்டி வைப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இப்பேரூராட்சியில் 15 வார்டுகளில், 10,000 பேர் வசிக்கின்றனர். பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பை கிடங்கு அமைத்து, மக்கும்,மக்கா குப்பை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. ஆனால், பள்ளத்துார் பேரூராட்சியில் குப்பை கொட்ட இடமின்றி, பல்வேறு இடங்களில் குப்பைகளை கொட்டி வைக்கின்றனர். குறிப்பாக பள்ளத்துார் -- கல்லுார் ரோட்டில் குப்பை, குப்பை கழிவுகளையும் கொட்டி வைக்கின்றனர். எனவே கல்லுார் ரோட்டில் உள்ள குப்பைகளை அகற்றி, நிரந்தர குப்பை கிடங்கு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளத்துார் பேரூராட்சி தலைவர் சாந்தி கூறியதாவது: தற்போது கல்லுார் ரோட்டில் குப்பைகள் கொட்டப்படுவதில்லை. குப்பைக்கு நிரந்தர இடம் கேட்டு வருகிறோம். பேரூராட்சிக்கு 5 ஏக்கர் இடம்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை