உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோந்து எஸ்.ஐ., ஏட்டு மாற்றம்

ரோந்து எஸ்.ஐ., ஏட்டு மாற்றம்

சிவகங்கை : மதகுபட்டியில் நகை அடகு கடையில் கடந்த 8ம் தேதி இரவு மர்ம நபர்கள் கடையின் பின்புறம் சுவரில் துளையிட்டு கடையில் லாக்கரை உடைத்து அதில் இருந்த 300 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். மதகுபட்டிபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் அன்று இரவு மதகுப்பட்டியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு எஸ்.ஐ., பாண்டி மற்றும் ஏட்டு சாகுலை, எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ