உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்களுக்கு என் மீது வருத்தம் இனி சிவகங்கைக்கு முக்கியத்துவம் கார்த்தி எம்.பி., திடீர் கரிசனம்

மக்களுக்கு என் மீது வருத்தம் இனி சிவகங்கைக்கு முக்கியத்துவம் கார்த்தி எம்.பி., திடீர் கரிசனம்

காரைக்குடி : காரைக்குடிக்கு அனைத்து திட்டங்களும் செல்வதாக சிவகங்கை மக்கள் என் மீது வருத்தத்தில் உள்ளனர் என கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.சிவகங்கை தொகுதி காங்.,வேட்பாளராக கார்த்தியை அறிவித்த நிலையில் நேற்று காலை, வாக்கர்ஸ் கிளப்பில் வாக்கிங் சென்றபடி மக்களை சந்தித்து பேசினார்.அவர் கூறியதாவது;வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்படவில்லை. பல மாநிலங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். புதிதாக மூன்று தொகுதிகள் வந்துள்ளது. பலர் புதிதாக போட்டியிட விருப்பம் தெரிவிக்கின்றனர். இதுவே கட்சி உயிரோட்டமாக இருப்பதற்கு எடுத்துக்காட்டாகும். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் காலம் உள்ளது. சிவகங்கை மக்களுக்கு என்மீது வருத்தம் உண்டு. பல திட்டங்கள் காரைக்குடிக்கு செல்கின்றது என்று தெரிவிக்கின்றனர். அவர்களது வருத்தத்தை போக்கும் விதத்தில் முதலாவதாக, சிவகங்கையில் வேலு நாச்சியார் பெயரில் மகளிர் போலீஸ் பயிற்சி நிலையம் கொண்டு வருவேன். அனைத்து பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி திட்டங்கள் வழங்கி வருகிறேன், இனி குறிப்பாக சிவகங்கை நகருக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !