உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூமாயி அம்மனுக்கு பொங்கல் விழா

பூமாயி அம்மனுக்கு பொங்கல் விழா

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் நேற்று வசந்த பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.இக்கோயிலில் பூச்சொரிதல் விழாவை அடுத்து வசந்த பெருவிழா ஏப்.29ல் கொடியேற்றப்பட்டு நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி இரவில் உற்ஸவ அம்மன் கோயில் குளத்தை பவனி வந்தார். நேற்று காலை 7:00 மணி அளவில் கோயில் வளாகத்தில் பெண்கள் அம்மனை வேண்டி பொங்கல் வைத்தனர். சிறப்பு பூஜைகளுக்குப் பின் மூலவர் சப்த மாதர்களுக்கும் அபிஷேகம் நடந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். நாளை அம்மன் ரத ஊர்வலமும், மே 8 காலையில் தீர்த்தவாரி, மஞ்சள் நீராட்டு, இரவில் தெப்பமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை