உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் பிளாட்பாரம் அமைப்பில் பிரச்னை; பஸ்களை திருப்ப முடியாமல் டிரைவர்கள் அவதி

தேவகோட்டையில் பிளாட்பாரம் அமைப்பில் பிரச்னை; பஸ்களை திருப்ப முடியாமல் டிரைவர்கள் அவதி

தேவகோட்டை : தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் வழியை மாற்றி அமைத்ததால் பஸ்களை இயக்க சிரமமாக உள்ளதாக டிரைவர்கள் புலம்புகின்றனர். தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பஸ்கள் உள்ளே,வெளியே செல்ல இரு வழி மட்டும் அமைக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டது.வழக்கமாக பிற பஸ் ஸ்டாண்ட்களில் இடதுபுறமாக உள்ளே சென்று வலது புறமாக பஸ்கள் வெளியேறும். ஆனால் தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் பிளாட்பாரம் அமைத்ததில் குழப்பம் ஏற்பட்டதால் பஸ்கள் நிறுத்துவதில், இயக்குவதில் பிரச்னை ஏற்பட்டது.10 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கிழக்கு பகுதியில் பிளாட்பாரம் கட்டப்பட்டது. அங்கும் ஒரு வழி அமைத்தனர். கிழக்கு பகுதியில் இருந்து வரும் சில பஸ்கள் அந்த வழியாக உள்ளே சென்றன. சில பஸ்கள் வழக்கமான வழியில் சென்று வந்தன. உள்ளே செல்வது இரு வழியாக இருந்தாலும் வெளியேறுவது ஒரே வழியாக இருந்ததால் எந்த பிரச்னையும் எழவில்லை.இரவு நேரத்தில் வெளியூரில் இருந்து வரும் நெடுந்துார அரசு விரைவு பஸ்கள் தாறுமாறாக நிறுத்துவதால் பஸ்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் உள்ளே வெளியே வரும் முறையை போலீசார் மாற்றி அமைத்தனர். டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி எடுத்து வெளியே எடுத்து செல்ல சிரமப்படுகின்றனர்.பகல் நேரத்தில் தடுப்பு வைத்து போலீசார் தடுத்தாலும் சிரமப்பட்டு பஸ்களை வெளியே எடுக்கின்றனர்.ஆனால் இரவில் நடுவில் தடுப்பு வைத்து விடுவதால் பஸ்களை எடுக்க டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.சிரமத்தை போலீசாரிடம் தெரிவித்தும் பயனில்லை, போலீஸ் உயர் அதிகாரிகள் பஸ்கள் நிற்கும் இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு நேரத்தில் அரசு விரைவு பஸ்கள் நிறுத்துவதையும் ஒழுங்கு படுத்தினால் தீர்வு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
மார் 08, 2025 09:37

காசை வாங்கிட்டு தத்திளை விட்டு கட்டச் சொல்வது ஒண்ணும் புதுசில்லையே. கிளாம்பாக்கத்தில் பாத்துக்கிட்டிருக்கோமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை