உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் நாட்டார் கால்வாய் சீரமைக்கும் பணி: கலெக்டர் ஆய்வு

மானாமதுரையில் நாட்டார் கால்வாய் சீரமைக்கும் பணி: கலெக்டர் ஆய்வு

மானாமதுரை : மானாமதுரை அருகே 16 கிராம கண்மாய்கள் பயன்பெறும் நாட்டார் கால்வாயில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மானாமதுரை அருகே ராஜகம்பீரம், அன்னவாசல்,கிளங்காட்டூர்,ஏ.நெடுங்குளம், சோமாத்துார் உள்ளிட்ட 16 கிராம கண்மாய்கள் பயன்பெறும் நாட்டார் கால்வாயை சீரமைக்க வேண்டுமென்று நாட்டார் கால்வாய் சங்கத் தலைவர் துபாய் காந்தி தலைமையிலான விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு ரூ.9.67 கோடி ஒதுக்கீடு செய்ததையடுத்து பொதுப்பணித்துறை நீர்வளத்துறை ஆகியவற்றின் சார்பில் சீரமைப்பு பணி துவங்கி நடைபெற்று வருகிறது.இப்பணிகளை ராஜகம்பீரம் அருகே நாட்டார் கால்வாய் துவங்கும் இடம் மற்றும் அரிமண்டபம்,சோமாத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.செயற்பொறியாளர் பாரதிராஜன்,உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், பொறியாளர்கள் செந்தில்குமார்,பூமிநாதன் மற்றும் நாட்டார் கால்வாய் சங்க தலைவர் துபாய் காந்தி, நிர்வாகி சோமாத்துார் உக்கிர பாண்டி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை