உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்குவதில் தயக்கம்

சிவகங்கை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்குவதில் தயக்கம்

சிவகங்கை : கூட்டுறவு துறை மூலம் 234 மகளிர் குழுவிற்கு ரூ.17.38 கோடியை அமைச்சர் உதயநிதி வழங்கியதால், நிதியின்றி சிவகங்கை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் வழங்க தயங்குவதாக புகார் எழுந்துள்ளது.கூட்டுறவு துறையில் நடப்பாண்டு (2024-2025) ரூ.200 கோடி வரை பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து, 2024 ஆகஸ்ட் வரை 4,436 விவசாயிக்கு ரூ.45.85 கோடி வழங்கியுள்ளனர். சுய உதவி குழுக்களுக்கு ரூ.182 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து, 598 குழுவிற்கு ரூ.48.82 கோடி வரை வழங்கியுள்ளன. அதில், செப்., 10 ம் தேதி காரைக்குடியில் அமைச்சர் உதயநிதியால் 234 மகளிர் குழுவிற்கு ரூ.17.38 கோடி கடன் கூட்டுறவு துறை மூலம் வழங்கினர். இது போன்று தொடர்ந்து கடன் வழங்கியதால், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் நிதியில்லை.இது தவிர 2021 ம் ஆண்டில் இருந்தே பயிர் கடன் பெற்ற விவசாயிகள் நிலுவையில் வைத்துள்ள கடன் பாக்கியே ரூ.பல கோடி வரை உள்ளது. இது போன்ற சூழலில் சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் பயிர் கடன் வழங்க தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையை நம்பி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெற்று, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.சங்கத்தில் ரூ.7 கோடி வரை நிலுவை: கூட்டுறவுத்துறை அதிகாரி கூறியதாவது: கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்ற விவசாயிகள் 2021ம் ஆண்டில் இருந்து நிலுவை கடனை அடைக்கவில்லை. இதனால், ஒவ்வொரு சங்கத்திற்கும் ரூ.1.5 கோடி முதல் 7 கோடி வரை பாக்கி உள்ளது. நிதியின்றி பயிர் கடன் வழங்குவதில் தேக்கம் நிலவுகிறது. இதனால், நிலுவை வைத்துள்ள விவசாயிகளிடம் இருந்து, அடங்கல் விபரங்களை பெற்று, பழைய கடனை புதுப்பித்து வருகிறோம். கடன் நிலுவை இல்லாத விவசாயிகளுக்கு மட்டுமே ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை வழங்குகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை