உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வருவாய்த்துறை நாள் விழா

வருவாய்த்துறை நாள் விழா

சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை தின விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துக்கழுவன், சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். விழாவில் துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கேக் வெட்டி கொண்டாடினார்.மேலும் ஊழியர்கள் சார்பில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை சிவகங்கை கிளை சிறைக்கு அன்பளிப்பாக வழங்கினர். கிளை சிறை தலைமை காவலர் கண்ண பெருமாள் பெற்றுக்கொண்டார். கலெக்டர் அலுவலகவளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் தமிழரசன் விழா குறித்து விளக்கம் அளித்தார். சங்க மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் கிருஷ்ணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை