உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அடகு கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை

அடகு கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை

சிவகங்கை : சிவகங்கை அருகே சிங்கினிபட்டி டாஸ்மாக் ஊழியர் பாண்டித்துரை. இவர் மதகுபட்டி அருகே தச்சம்புதுப்பட்டி ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடைக்கு வாட்ச்மேன் வரவில்லை. இதை பயன்படுத்தி மர்ம நபர்கள், கடையின் பக்கவாட்டு சிமென்ட் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்தனர். அங்கிருந்த லாக்கரை உடைத்து, 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.கொள்ளையடிக்கப்பட்ட அடகு கடையை போலீஸ் எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் பார்வையிட்டனர். இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி