மேலும் செய்திகள்
பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
02-Mar-2025
காரைக்குடி : காரைக்குடி தி லீடர்ஸ் அகாடமி பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிநீர் பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் குறித்து மாணவர்கள் விளக்கினர். மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், மழைநீர் சேகரிப்பு, பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தினர். காரைக்குடி அருகே உள்ள கிட் அண்ட் கிம் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கான பேப்பர் பிரசன்டேஷன், சயின்ஸ் ப்ராஜெக்ட் உள்ளிட்ட பல்வேறு போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.கல்லூரி தலைவர் ஐயப்பன் தலைமையேற்றார். முதல்வர் மயில்வாகணன், துணை முதல்வர் கற்பக மூர்த்தி, டீன் பார்த்தசாரதி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பேராசிரியர் திருமாவளவன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்.
02-Mar-2025