உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை

சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், பள்ளி மாணவர்களை பரிசோதிப்பது, நடமாடும் மருத்துவமனை போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 டாக்டர்கள், மற்ற சுகாதார நிலையங்களில் தலா 2 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.பள்ளி மாணவர்களை பரிசோதிக்க தலா 2 பேர், நடமாடும் மருத்துவமனைக்கு தலா ஒருவர் இருக்க வேண்டும். மாவட்ட சுகாதாரத் துறையில் மொத்தம் 193 டாக்டர் பணியிடங்கள் உள்ளன. இதில் மாவட்டத்தில் 50 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களும் நீண்ட காலம் நிரப்பப்படாமல் உள்ளது.இதனால் சிகிச்சை அளிப்பதிலும், பள்ளி மாணவர்களை பரிசோதிப்பது, நடமாடும் மருத்துவமனை போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும்என கோரிக்கை எழுந்துள்ளது.மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன் கூறுகையில், விரைவில் காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை