உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் மின் பணியாளர் பற்றாக்குறை

திருப்புத்துாரில் மின் பணியாளர் பற்றாக்குறை

திருப்புத்துார்: திருப்புத்துாரில் மின் பணியாளர் பற்றாக்குறையால் மின் பழுதை சீரமைக்க தாமதம் ஏற்படுகிறது.மாநில அளவில் மின்பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக வயர்மேன், உதவியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்காலிக பணியாளர்களை பயன்படுத்தி கொள்ள வாரியம் முடிவெடுத்துள்ளது. உள்ளூர் அதிகாரிகளே தேவையான பணியாளர்களை கணக்கெடுத்து பணி அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்புத்துார் பகுதியில் தற்போது போதிய அளவில் கேங்மேன் உள்ளனர். மின்சாரம் இல்லாத பணிகளுக்கு இவர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். புதிய மின் கம்பம் நடுதல், மின் இணைப்புக்கான ஏற்பாடு இவர்களால் செய்யப்படுகிறது.ஆனால் டிரான்ஸ்பார்மார் வாரியாக பணியாற்ற வேண்டிய பணியாளர் பற்றாக்குறையாக உள்ளது. ஒரு பணியாளர் 6 டிரான்பார்மர்களை பராமரிக்க வேண்டிய நிலையில் தற்போது 10 டிரான்ஸ்பார்மர்கள் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் மின் விநியோகப் பிரச்னை ஏற்பட்டால் மின்நுகர்வோர் புகார் அளித்து சரி செய்ய பல மணி நேரமாகி விடுகிறது. பணி விதிக்கு மாறாக கேங்மேன் களையும் பயன்படுத்த வேண்டியுள்ளது.இதனால் கூடுதலாக லைன் மேன்கள் ' தேவைப்படுகிறது. மின்துறையினர் தற்காலிக பணியாளர் நியமிக்கையில் கூடுதலாக லைன் மேன் தகுதியுடையவர்களை நியமிக்க முன் வர வேண்டும் என்ற பொதுமக்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ