உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநில சைக்கிள் போட்டி

மாநில சைக்கிள் போட்டி

திருப்புத்தூர் : சிவகங்கைமாவட்டம் பொன்னாங்குடி கண்டரமாணிக்கம் நாட்டு புனித சவேரியாரின் ஆடி மாத சப்பர தேர் பவனி விழாவை முன்னிட்டு மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் இணைந்து சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. பொன்னாங்குடியில் துவங்கி திருப்புத்தூர் பைபாஸ் வரை மொத்தம் 20 கி.மீ.,க்கு இரண்டு சுற்றுகளாக ஆண், பெண் என இரு பிரிவாக நடத்தப்பட்ட போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு மேல்குடி கார்த்திகேயன், 2ம் பரிசு தூத்துக்குடி ஜான்பால், 3ம் பரிசு திருச்சி சந்தோஷ் பெற்றனர். பெண்கள் பிரிவில் முதல் பரிசு காரைக்குடி சரிகா ஸ்ரீ, 2ம் பரிசு கண்டரமாணிக்கம் இன்பா ஸ்ரீ, 3ம் பரிசு மதுரை ஆலம்பட்டி நந்தினி, 4ம் பரிசு மதுரை ஒத்தப்பட்டி பானு ஸ்ரீ ஆகியோர் பெற்றனர். மாரத்தான் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை