உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இலவச வீட்டு மனை கேட்டு போராட்டம்

இலவச வீட்டு மனை கேட்டு போராட்டம்

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே இலவச வீட்டு மனை வழங்கக் கோரி தாலுகா அலுவலக வாசலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கண்டரமாணிக்கத்தில் அரசு கையகப்படுத்திய 2 ஏக்கர் 10 சென்ட் இடம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில், வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு மனையிடம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார்.அண்ணாதுரை சிலையிலிருந்து ஊர்வலமாக வந்த அமைப்பினர் தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் அனுமதிக்காததால் வாசலை மறித்து தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல் முறைகேடாக வேறு நபர்களுக்கு பட்டா போட்டுக்கொடுக்க முயலும் அதிகாரிகளை கண்டிக்கிறோம் என கோஷம் எழுப்பினர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டு தாசில்தாரிடம் மனு அளித்துவிட்டு கலைந்துசென்றனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள்சங்க கல்லல் ஒன்றிய செயலாளர் பாலு, மா. கம்யூ., நகர செயலாளர் அமானுல்லா, விவசாய சங்க கல்லல் ஒன்றிய செயலாளர் மாதவன், ஜனநாயக மாதர் சங்கம் சுபாஷினி, ஓவியம்,கிளைச் செயலாளர் அழகப்பன், போஸ், பீர்முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை