உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாங்குளத்தை மதிப்பீடு செய்த மாணவர்கள்

மாங்குளத்தை மதிப்பீடு செய்த மாணவர்கள்

மதுரை: மேலுார் மாங்குளத்தில் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு செய்தனர்.விவசாயி குபேந்திரன் தலைமையில் அப்பகுதி மக்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. அவர்கள் கூறியதாவது: இப்பகுதியில் கரும்பு, நெல் அதிகம் பயிரிடுகின்றனர். வேலையாட்கள் அதிகம் கிடைப்பதில்லை. தண்ணீர் வசதி இருந்தாலும் சாகுபடி நேரத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை. விளைபொருட்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது.பயிர்களில் பூச்சி நோய் தாக்குதலை நாங்களே சரிசெய்து விடுவோம். மற்றவற்றை அரசு செய்து தரவேண்டும் என்றனர். கிராம வரைபடம், சமூக நிலை, கிராம வழக்கம், பயிர் முறை ஆகியவற்றை மரம் போல கிளைகளுடன் வரைந்து பொதுமக்களிடம் விளக்கினர். மாணவர்கள் சந்திரமோகன், லோகநாதன், குருபிரசாத், தீபன், யோகேஷ், சிவக்குமார், கமலேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை