மேலும் செய்திகள்
நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
24-Feb-2025
இளையான்குடி: இளையான்குடி பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையை தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் கோடை உழவுப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், முனைவென்றி உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மிளகாய்க்கு அடுத்தபடியாக நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. வானம் பார்த்த பூமியான இங்கு பெய்யும் மழையை நம்பியும், வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் போது கால்வாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு கண்மாய்களில் தேக்கியும் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 1 மாதத்திற்கு முன்பு இப்பகுதியில் நெல் விவசாயம் செய்து முடித்துள்ள நிலையில் கடந்த வாரம் கோட்டையூர், கல்வெளிப்பொட்டல்,தெற்கு கீரனூர் உள்ளிட்ட சில கிராமங்களில் பெய்த மழையை தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் தங்களது வயல்வெளிகளில் கோடை உழவு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து விவசாயி தங்கபாண்டியன் கூறியதாவது, நெல் அறுவடை முடிந்த பிறகு கோடை மழை பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் தான் பெய்யும்.ஆனால் தற்போது மாசி மாதமே கோடை மழை பெய்ததை தொடர்ந்து ஏராளமானோர் உழவுப் பணியில் ஈடுபட தொடங்கிவிட்டனர். பருவத்தில் நெல் விதைக்கும் போது விளைச்சல் கிடைக்கும் என்பதால் உழவு பணியில் ஈடுபடுகின்றனர், என்றார்.
24-Feb-2025