உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேளாண் கருவி வழங்கல்: விவசாயிகள் அதிருப்தி  

வேளாண் கருவி வழங்கல்: விவசாயிகள் அதிருப்தி  

சிவகங்கை; சிவகங்கையில் 26 விவசாயிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி பங்கேற்றனர். மாவட்ட அளவில் 26 விவசாயிகளுக்கு ரூ.56 லட்சத்து 15 ஆயிரத்து 261 மானியத்தில், ரூ.1.10 கோடி மதிப்பிலான டிராக்டர், பவர் டிரில்லர், பவர் வீடர், நெல் நடவு இயந்திரங்களை அமைச்சர் வழங்கினார். நேற்று மதியம் 12:30 மணிக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் காலை 10:30 மணியில் இருந்து விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் மதியம் 2:30 மணிக்கு வழங்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை