உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேர்தலில் பறிமுதல் செய்த ரூ.54.02 லட்சம் ஒப்படைப்பு

தேர்தலில் பறிமுதல் செய்த ரூ.54.02 லட்சம் ஒப்படைப்பு

சிவகங்கை: லோக்சபா தேர்தலின் போது வாகன சோதனை மூலம் பறிமுதல் செய்த தொகையில் ரூ.54.02 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சிவகங்கை லோக்சபா தேர்தலின் போது நபர் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணமின்றி கொண்டு சென்றால், பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. சிவகங்கை தொகுதியில் பறக்கும்படை, நிலையான, வீடியோ கண்காணிப்பு குழு மூலம் மார்ச் 16 முதல் ஏப்., 19 வரை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்த சென்றதாக ரூ.65 லட்சத்து 91 ஆயிரத்து 730 யை பறிமுதல் செய்து அந்தந்த கருவூலகத்தில் ஒப்படைத்தனர். இவற்றில் உரிய ஆவணங்களை சமர்பித்தால் உரிய விசாரணை நடத்தி, பணம் திருப்பி தரப்படும் என தெரிவித்தனர். அதன்படி உரிய விசாரணையின் மூலம் ஆவணங்களை சமர்பித்தவர்களுக்கு ரூ.54 லட்சத்து 2 ஆயிரத்து 160 யை திரும்ப ஒப்படைத்துள்ளனர். அவற்றில் ரூ.3.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை விடுவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி