உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மூதாட்டியை கடித்த நாய்

மூதாட்டியை கடித்த நாய்

தேவகோட்டை : தேவகோட்டை அழகாபுரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 70, நேற்று மாலை 4:00 மணியளவில் வீட்டு அருகே நின்றார். அந்த வழியாக வந்த நாய் மூதாட்டியை கடித்து குதறியது. இதில் கை, மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது. அந்த பக்கம் வந்தவர்கள் நாயை விரட்டி மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தேவகோட்டையில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி