உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் கொட்டிய மழை

சிங்கம்புணரியில் கொட்டிய மழை

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டிய நிலையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்ய துவங்கியுள்ளது.நேற்று மாலை 5:00 மணிக்கு சிங்கம்புணரி, சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யத் துவங்கியது. இரவு 7:00 மணி வரை தொடர்ந்து பெய்த மழை காரணமாக வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்றது.சிங்கம்புணரி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குள் மழைநீர் சென்றதால் ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றினர். சில தினங்களில் ஐயனார் கோயில் தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் பக்தர்கள் வெயிலை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது நேற்று பெய்த மழை பக்தர்களையும் விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி சென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை