உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் 

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் 

சிவகங்கை: கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பள சட்டப்படி சம்பளம் வழங்க கோரி சிவகங்கை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை தொட்டி ஆப்பரேட்டர், துாய்மை பணியாளர், துாய்மை காவலர், சுகாதார ஊக்குநர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் சிவகங்கை தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் பீட்டர், செயலாளர் ஆரோக்கிய பல்தசார், பொருளாளர் விஜயபாண்டியன் தலைமை வகித்தனர். மாநில துணை தலைவர் துரைராஜ், மாநில செயற்குழு பாண்டிமீனாள், வீராம்பாள், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை விளக்கி விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, நகர் செயலாளர் மருது உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட ஆலோசகர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை