உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டில் நகை பணம் திருட்டு

வீட்டில் நகை பணம் திருட்டு

திருப்புத்துார் : திருவுடையார்பட்டியை சேர்ந்த சௌந்தரபாண்டி மனைவி பாண்டிச்செல்வி32. கணவர் சௌந்தரபாண்டி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பாண்டிச்செல்வி காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ