உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் வங்கி வாசலில் ரூ.2.44 லட்சம் திருட்டு

சிவகங்கையில் வங்கி வாசலில் ரூ.2.44 லட்சம் திருட்டு

சிவகங்கை:சிவகங்கை அம்மா உணவகம் அருகேயுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன் வாடிக்கையாளரின் ரூ.2.44 லட்சத்தை திருடிச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லாவயல் முடிக்கரை கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜா மகன் நாகநாதன் 53. இவர் நேற்று மதியம் சிவகங்கை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஆறரை பவுன் தங்க நகையை அடகு வைத்து ரூ.2.44 லட்சத்தை பெற்றார்.வங்கி வாசலில் நிறுத்தியிருந்த டூ வீலரில் இருந்த பையில் பணத்தை வைத்தார். அலைபேசியில் மகனிடம் பேச முற்பட்டார். அப்போது அவர் அருகில் இருந்த நபர் 'உங்களது பணம் கீழே விழுந்து கிடக்கிறது 'என நாகநாதனிடம் கூறியிருக்கிறார். அவரும் கீழே கிடந்த பணத்தை எடுத்தபோது அவரது டூவீலரில் வைத்திருந்த ரூ.2.44 லட்சத்தை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பிச்சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ