உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கைகள் இல்லை

காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கைகள் இல்லை

காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருக்கை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்குடியிலிருந்து மதுரை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது. சுற்றுலாத்தலமான காரைக்குடிக்கு பலர் தினமும் வந்து செல்கின்றனர். தினமும் அதிக பயணிகள் வந்து செல்லும் புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதி இல்லை. வெயில் காலம் என்பதால் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அலைகின்றனர். பஸ் ஸ்டாண்டில் பல லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. பயணிகள் அமர போதிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜூன் 13, 2024 09:33

காரைக்குடியில் கடந்த அறுபது ஆண்டுகளாக வசித்துவரும் ஒருவரின் கருத்து காரைக்குடி முனிசிபல் பேருந்து நிலையத்தில் மதுரை திருச்சி பேருந்து செல்லும் நடைமேடைகளில் போதுமான இருக்கைகள் உள்ளன. அதேபோல் ராம்நாடு, அறந்தாங்கி நடைமேடைகளிலும் போதுமான இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன .இதற்குமேலும் இருக்கைகள் இருப்பின் மக்கள் நடமாட்டம் பாதிக்கப்படும். தண்ணீர் பிரச்சினை. ஆரவூ தண்ணீரை கழுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை