உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இருந்த ஒரு டாக்டரும் பணியிட மாற்றம்; மருத்துவமனையில் நோயாளிகள் ஏமாற்றம்

இருந்த ஒரு டாக்டரும் பணியிட மாற்றம்; மருத்துவமனையில் நோயாளிகள் ஏமாற்றம்

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எக்கோ பரிசோதனைக்கு இருந்த ஒரு டாக்டரும் பணி மாறுதலில் மதுரைக்கு சென்றதால் எக்கோ பரிசோதனை செய்ய முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எக்கோ பரிசோதனை மையத்தில் நிரந்தர டாக்டர் இல்லாததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே இதுநாள் வரை பரிசோதனை நடந்தது. இங்குள்ள ஒரு டாக்டருக்கு 3 நாட்கள் சிவகங்கையிலும், 3 நாட்கள் மதுரையிலும் பணி வழங்கப்பட்டது.சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எக்கோ பரிசோதனை மையத்திற் வரும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது 3 நாட்கள் வந்த டாக்டரும் பணி மாறுதலில் நிரந்தரமாகவே மதுரைக்கு சென்றதால் எக்கோ பரிசோதனை மையம் இயங்க முடியாத நிலை உள்ளது. மருத்துவமனையில் அவசர நிலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு எக்கோ பரிசோதனை செய்ய முடியாத சூழல் உள்ளது. இசிஜி பரிசோதனையில் மாறுபாடு உள்ள கர்ப்பிணிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் சூழல் உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இருந்தும் எக்கோ பரிசோதனை மையத்திற்கு நிரந்தர டாக்டர் இல்லாதால் நோயாளிகள் தினமும் இங்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ