உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா

திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மே13ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். மே 12 மாலை பூர்வாங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து மே 13 காலையில் ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் நடந்து விழா துவங்கும். சூரிய பிறை, சந்திர பிறைகளில் சுவாமியும், அம்பாளும் திருவீதி வலம் வருவர்.தொடர்ந்து தினசரி வெள்ளிக்கேடகம், பூதம், அன்னம், யானை, பூப்பல்லக்கு,வெள்ளி ரிஷப வாகனம், கைலயாம், சிம்மம், குதிரை வாகனங்களில் இரவு திருவீதி உலா நடைபெறும். மே 17 காலையில் அம்மன் தவத்திற்கு எழுந்தருளலும், திருக்கல்யாணமும் நடைபெறும். மே 20 காலையில் நடராஜர் புறப்பாடும், மே21 ல் தேரோட்டமும், மே22 ல் தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி