மேலும் செய்திகள்
திருவாசகம் முற்றோதல் விழா
05-Aug-2024
மானாமதுரை:மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தில் பூமிக்கடியில் புதையுண்டு கிடந்த சிவலிங்கத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கோவையைச் சேர்ந்த அறன் அமைப்பினர் சிதிலமடைந்து கிடந்த சிவலிங்கத்தை எடுத்து பிரதிஷ்டை செய்து சுவாமிக்கு பழமலைநாதர், அம்மனுக்கு பெரிய நாயகி என்றும் பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷங்கள், மற்றும் சிவராத்திரி விழாக்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் நேற்று மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் சிவனடியார்கள் கூட்டத்தினர் மற்றும் மேலப்பசலை கிராமத்தினர் கோயில் முன்பாக திருவாசகம் முற்றோதல் விழாவை நடத்தினர். இதில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடந்தது.
05-Aug-2024