உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருவாரூர் - காரைக்குடி ரயில் அனைத்து நாட்களும் இயக்கம்

திருவாரூர் - காரைக்குடி ரயில் அனைத்து நாட்களும் இயக்கம்

காரைக்குடி : திருவாரூர் - காரைக்குடி ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் தினசரி ரயிலாகவும் இயக்கப்பட உள்ளது. திருவாரூரிலிருந்து காரைக்குடி வரை டெமோ பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் நேரம் தற்போது மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூரில் இருந்து காலை 6:20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு காலை 9:35க்கு வந்து சேரும். மறு மார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு இரவு 9:25 மணிக்கு திருவாரூர் சென்றடையும். இந்த ரயிலானது இதுவரை, ஞாயிறு தவிர மற்ற 6 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இன்று முதல் வாரத்தின் 7 நாட்களும் திருவாரூர் - காரைக்குடி ரயில் தினசரி ரயிலாக இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி