உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி அருங்காட்சியகத்திற்கு வர மறுக்கும் டவுன் பஸ்கள்

கீழடி அருங்காட்சியகத்திற்கு வர மறுக்கும் டவுன் பஸ்கள்

கீழடி, : கீழடி அருங்காட்சியகத்திற்கு டவுன் பஸ்கள் வர மறுப்பதால் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், விடுமுறை தினங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரும் வந்து செல்கின்றனர். அருங்காட்சியகத்திற்கு பெரும்பாலும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தான் வந்து செல்ல முடிகிறது. பஸ்சில் வருபவர்கள் பலரும் சிலைமானில் இறங்கி ஆட்டோ பிடித்து வர வேண்டியுள்ளது. ஷேர் ஆட்டோ உள்ளிட்டவற்றில் வந்தாலும் நான்கு வழிச்சாலையிலேயே இறக்கி விட்டு விடுகின்றனர். அங்கிருந்து இரண்டு கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது.மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கீழடி வழியாக கொந்தகை, இலந்தைகுளம், மாங்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு டவுன் பஸ்கள் செல்கின்றன. இவை போகும் போதும், வரும் போதும் அருங்காட்சியகம் சென்று திரும்ப உத்தரவிடப்பட்டது. ஒரு சில நாட்கள் மட்டுமே சென்ற பேருந்துகள் தற்போது செல்வது இல்லை.இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் கீழடி கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் இருந்து கீழடி வரை சுற்றுலா பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ள நிலையில் டவுன் பஸ்களும் வராததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியில் உள்ளனர். போக்குவரத்து கழகங்கள் கீழடி அருங்காட்சியகம் வரை டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி