உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல்

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல்

திருப்புவனம்: திருப்புவனத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.வளர்ந்து வரும் நகரங்களில் திருப்புவனமும் ஒன்று. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கடைகளும் அதிகரித்து வருகின்றன. மதுரை -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை திருப்புவனம் வழியாக சென்றதால் நகர்ப்பகுதியில் 7 மீட்டர் அகல சாலையாகமாற்றப்பட்டது.ஆனால் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் காரணமாக சாலை குறுகி 3 மீட்டராக சுருங்கிவிட்டது. அதிலும் ரோட்டை ஒட்டி சிறு வியாபாரிகள் பலரும் தேங்காய், மாம்பழம், திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனைசெய்கின்றனர்.இதனால் மேலும் குறுகி வாகனங்களே செல்ல முடியவில்லை. எதிர் எதிரே வாகனங்கள் வந்தாலும் விலக முடியாமல் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் தங்களது டூவீலர்களை ரோட்டை ஒட்டி வரிசையாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: 10 ஆண்டாக இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சாலையை ஒட்டி உள்ள கடைக்காரர்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிரந்தர கடைகளாக கட்டி வருகின்றனர். இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறைக்கு பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை