உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராம ஊராட்சிகளில் பசுமை வளர்ச்சி  திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு பயிற்சி

கிராம ஊராட்சிகளில் பசுமை வளர்ச்சி  திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு பயிற்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 445 ஊராட்சிகளில் வேலை உறுதி திட்ட பணி நடைபெற்று வருகிறது. இப்பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.320 சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பணிகளில் கால்வாய் துார்வாருதல், கிராம ஊராட்சி அளவில் மரக்கன்று நட்டு பராமரித்தல், நீர்நிலைகளை மேம்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5 பணித்தள பொறுப்பாளர்கள் உள்ளனர். அவர்களை கண்காணிக்க ஒரு ஊராட்சிக்கு ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளர் செயல்படுகின்றனர். தமிழகத்தில் 'பசுமை பரப்பை' 33 சதவீதமாக அதிகரிக்க மரக்கன்றுகள்நடுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்போது 23.78 சதவீதம் மட்டுமே பசுமை மரங்கள் உள்ளன. அவற்றை 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கில், அவற்றை வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் ஆப்பில் பதிவு செய்வதற்கான பயிற்சி வகுப்பு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. திருப்புத்துார் வனத்துறை ரேஞ்சர் சுபாஷ் பயிற்சி அளித்தார். உதவி திட்ட அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். வேலை உறுதி திட்ட பி.டி.ஓ., சுமதி முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அந்தந்த ஊராட்சிகளில் வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் நிலை குறித்து அலைபேசி மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டுமென பயிற்சியளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை